முகப்புஇன்றைய செய்திகள்குற்றம்அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றிய செய்த அதிர்ச்சி சம்பவம்

அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றிய செய்த அதிர்ச்சி சம்பவம்

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்ததால் பெற்றோர் அதிர்ச்சி – தந்தை காவல்நிலையத்தில் புகார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25) என்பவரது மனைவி கார்த்திகா(23)விற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து நாக்கு வளர்ச்சி இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால் கடந்த ஆண்டு நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்

ஓராண்டு கழித்து மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மீண்டும் நேற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்

இது குறித்து அதிர்ச்சியடைந்து மருத்துவர்களிடம் கேட்டபோது மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்

இது குறித்து குழந்தையின் தந்தை மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார்

ஒரு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றிய செய்த அதிர்ச்சி சம்பவம் எதிரொலியாக சைல்டு்லைன் அதிகாரிகளும் விசாரணை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!