முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரையில் பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு

மதுரையில் பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு

மதுரை பழைய விளாங்குடி பகுதியை சேர்ந்த தனசேகரன் – உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் 2 மகன் உள்ளனர்.
இந்த நிலையில், பெரிய மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறான்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டு வந்த போது அரசு பேருந்தில் கூட்டமாக இருந்ததால் விளாங்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் கூட்டமாக ஏறினர்.
படிக்கட்டில் தொங்கியபடி வந்த பள்ளி மாணவர்கள் குரு தியேட்டர் அருகே பஸ் வந்த போது பிரபாகரன் தவறி கீழே விழுந்ததில், அரசு பஸ்சின் டயர், மாணவர் மீது ஏறி இறங்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்தார்.
வறுமை நிலையில் மாணவனை படிக்க வைக்க பள்ளிக்கு அனுப்பி வைத்த குடும்பம் இன்று அவர் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு கதறி அழும் காட்சி காண்போரையும் கண்ணீர் வரவழைத்தது.
பள்ளி மாணவன் பிரபாகரன் பேருந்து படிக்கட்டில் பயணித்தபோது தவறி விழுந்து குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!