தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசு ஆசிரியர்களுக்கான 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், ஆசிரியர் பணி நியமனத்திற்கான உச்ச வரம்பு குறித்து அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், மேலும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்,
மேலும் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும், தொலைதூர, மலைப் பகுதிகளில் பெண் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது, புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும், பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆணையாளர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி விரைவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்மற்றும் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.