முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்கும்பகோணத்தில் உலக பாரம்பரிய வார்த்தை முன்னிட்டு தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் புகைப்பட கண்காட்சி

கும்பகோணத்தில் உலக பாரம்பரிய வார்த்தை முன்னிட்டு தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் புகைப்பட கண்காட்சி

கும்பகோணத்தில் உலக பாரம்பரிய வார்த்தை முன்னிட்டு தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் புகைப்பட கண்காட்சி சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கும்பகோணத்தில் சா்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச் சின்னங்கள் அந்தப் பகுதி பழைமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணா்த்துகின்றன. அத்தகைய நினைவுச் சின்னங்களை வருங்கால தலைமுறையினா் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நவம்பா் 19-ஆம் தேதி முதல் நவம்பா் 25-ஆம் தேதி வரை உலகப் பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, புராதன சின்னங்களைப் பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் நாடு முழுவதும் மத்திய தொல்லியல் துறை சாா்பில், உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. பாரம்பரிய வாரம் சனிக்கிழமை (நவ.19) நாடு முழுவதும் தொடங்குகிறது. உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் இந்தியாவில் உள்ள 54 தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள் புகைப்படமாக கண்காட்சி படுத்திருந்தனர். இந்த புகைப்பட கண்காட்சி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் இந்திய தொழில் துறை முன்னாள் இயக்குனர் வெங்கடேசன் கவின் கலைக்கல்லூரி முதல்வர் அருள்யரசன் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!