முகப்புஇன்றைய செய்திகள்குற்றம்தூத்துக்குடி மாவட்டத்தில் வக்கீல் என்று கூறிக் கொண்டு பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வக்கீல் என்று கூறிக் கொண்டு பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வக்கீல் என்று கூறிக் கொண்டு பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே வக்கீல் என்று கூறிக் கொண்டு, பலரிடம் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வரும் நபர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்தவர் இராதாகிருஷ்ணன் (42). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு சொந்தமான பூர்வீக வீடு ஒன்று, ஆத்தூர் அடுத்த புன்னை சாத்தான் குறிச்சி கிராமத்தில் உள்ளது. அதனை கடந்த ஆகஸ்டு மாதம் 18- ஆம் தேதி அவரது தந்தை, இராதாகிருஷ்ணன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தார்.

இதனை தெரிந்து கொண்ட வடக்கு மரந்தலை என்னும் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை மகன் செல்வகுமார் (36) என்பவர், இராதாகிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு, தான் ஒரு பிரபல வக்கீல்,நீங்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு இலஞ்சம் கொடுத்து தான், உங்களது இடத்தை பத்திரப் பதிவு செய்தீர்கள் என்ற விபரம் எனக்கு தெரியும். என்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது. இதனை நான் வெளியில் கூறாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன்னை காலி செய்து விடுவேன் என்று மிரட்டத் தொடங்கினார். இதனால் உயிருக்கு பயந்த இராதாகிருஷ்ணன் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் சிஎஸ்ஆர் (483/2022) பதிவு செய்து செல்வக்குமாரை விசாரணைக்கு ஆஜராக வருமாறு காவல் நிலையம் அழைத்த போது, அவர் ஆஜராகாமல் தொடர்ந்து போலீசுக்கு போக்கு காட்டி வந்தார். இந்த நிலையில், தெற்கு ஆத்தூர், தேவர் தெருவை சேர்ந்த ஐய்யப்பன்(28) என்பரிடமும் செல்வகுமார் தான் ஒரு பிரபல வக்கீல் என்று கூறிக் கொண்டு ரூபாய் 1.13 இலட்சம் பணம் பறித்துடன், பணத்தை திருப்பிக் கேட்ட அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால், மனவேதனை அடைந்த ஐயப்பன் அது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சிஎஸ்ஆர்( 489/2022) பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு வக்கீல் என்று கூறிக் கொண்டு செல்வக்குமார், ஆத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இதே போன்று, பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருந்து வருகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மோசடிப் பேர்வழி செல்வக்குமார் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!