Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

திருவொற்றியூரில் குடியிருப்பு பகுதியில் ஒருவரது வீட்டில் பிடிபட்ட கட்டு விரியன் பாம்பு

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் வசிக்கும் விஜய் என்பவர் வீட்டில் மாலை நேரத்தில் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது இதனை அறிந்த விஜய் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்

தகவலின் அடிப்படையில் திருவொற்றியூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக வீரர்கள் உடனடியாக வந்தனர் அப்பொழுது வீட்டின் உட்புறத்தில் உள்ள பாம்பை ஒரு மணி நேரமாக போராடி லாபமாக பிடித்து எடுத்து சென்றனர் அப்பொழுது தீயணைப்பு துறை வீரர்கள் கூறும் பொழுது இது கட்டுவிரியன் வகை பாம்பை சார்ந்தது என்றும் மிகவும் அதிகமான விஷத்தன்மை கொண்டது என்றும் கூறினர்

மக்கள் குடியிருக்கும் பகுதியில் திடீரென பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க