October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

பள்ளி மாணவர்கள் 96 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவ,மாணவிகள் 96 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது

இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஷிதாபானு சாதிக்
தலைமை தாங்கினார்.ஒன்றியக் குழுத் தலைவர் கே.மகேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா.வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.கீதா அனைவரையும் வரவேற்றார்.விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்கள் 96 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன்,ஒன்றியக் குழு துணைத்தலைவர் இரா.முருகப்பா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நாகலட்சுமி முத்துராமன்,மற்றும் ராஜவள்ளி பாலமுருகன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி.ஆசிரிய ஆசிரியைகள்,மாணவர்கள்,கலந்து கொண்டனர்.நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் வெ.முத்துக்குமரன் நன்றி கூறினார். படம்:பள்ளி மாணவர்கள் 96 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கியபோது எடுத்த படம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க