முகப்புUncategorizedஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் விழாவின் போது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் விழுந்து...

ஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் விழாவின் போது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் விழுந்து பலி

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் விசேஷ வழிபாடு நடத்துவது வழக்கம். அந்தவகையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2வது வெள்ளிக் கிழமையில் கடந்த வெள்ளியன்று அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணைகள் நடத்தப்பட்டது.

பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கும் பொருட்களை வைத்து அம்மனுக்கு கூழ்காய்ச்சி அம்மனுக்கு படைத்து பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். அதற்காக சுமார் 6க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரத்தில் (அண்டாவில்) பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் என்கின்ற முருகன் சில பக்தர்களுடன் கூழ்காய்ச்சி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழ்அண்டாவில் விழுந்தார். அவர் மீது கூழ் கொட்டி உடல் முழுவதும் வெந்தது. அவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் சிறந்த நிலையில் நல் இரவில் சிகிச்சை பலன்றி இறந்தார்.

இந்த நிலையில் முத்துக்குமார் குழு காட்சிய அண்டாவில் விழும் பதைபதைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் திடீரென படிப்பு நோய் ஏற்பட்டு அண்டாவில் விழும் காட்சிகள் பதிவாகியுள்ளது தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்கும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!