முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்நான்கு மாதங்களாக ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் செயலாளரை கண்டுபிடித்து தரக்கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு

நான்கு மாதங்களாக ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் செயலாளரை கண்டுபிடித்து தரக்கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு

ஆதி கிறிஸ்தவ கூட்டமைப்பின் பொறுப்பாளர் செபஸ்டின் சூசை ராஜ் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் புனித ஜஸ்டின் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் செயலாளராக பணிபுரிந்த சகோதரி அமலோற்பவம் கடந்த நான்கு மாதங்களாக காணவில்லை எனவும், இதுகுறித்து மதர் ஜெனரல் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் குறித்த எந்த தகவலையும் தர மறுக்கிறார்.

அவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற தகவலையும் சொல்லாமல் மூடி மறைக்கிறார். கிறிஸ்தவ அமைப்பின் கீழ் இருந்து செயல்பட்ட ஒருவர் திடீரென காணாமல் போன விவகாரத்தில் காவல் துறையிலும் புகார் மனுவும் கொடுக்கவில்லை.

எனவே எங்களது அமைப்பின் சார்பாக சகோதரி அமலோற்பவத்தை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். என அந்த மனுவில் குறிப்பிட்டார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சகோதரி அமலோற்பவம் காணாமல் போனது குறித்து காவல்துறைக்குத் தெரியாமல் மூடி மறைத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்த மதர் ஜெனரல் மீதும் சி ஐ சி கான்கிரிகேசன் நிர்வாகத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளதாக கூறினார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!