முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரையில் பள்ளி ஆண்டுவிழாவில் 700 மாணவர்கள் பங்கேற்ற "நதிகள் சங்கமம்" கலைநிகழ்ச்சி

மதுரையில் பள்ளி ஆண்டுவிழாவில் 700 மாணவர்கள் பங்கேற்ற “நதிகள் சங்கமம்” கலைநிகழ்ச்சி

“நதிகளின் சங்கமம்” என்ற தலைப்பின் கீழ் இந்தியாவில் பாய்ந்து ஓடும் 15 முக்கிய நதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி ஆண்டு விழாவில் மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுரை விளாங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்சி பள்ளியின் 12 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சுமார் 700 மாணவ, மாணவிகள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து ஆண்டு விழாவில் மைய கருத்தாக “நதிகளின் சங்கமம்” என்ற தலைப்பின் கீழ் கங்கை, யமுனை, கோதாவரி, வைகை உள்ளிட்ட 15 நதிகளை இணைக்க வேண்டும் எனவும், இனைப்பதால் நீர் வளம் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மூலம் செய்து அசத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை சென்ட்ரல் வாட்டர் கமிஷன் டைரக்டர் தங்கமணி கலந்து கொண்டு நதிகள் இணைப்பு குறித்து பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார், மேலும் இந்த நிகழ்வில் காவல்துறை உதவி ஆணையர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!