தமிழ் சினிமாவிற்கு சம்பந்தமில்லாத புது விதமான முயற்சி சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் என்பதை மக்களுக்கு போட்டு காண்பித்து சிங்கிள் சாட் பற்றி விளக்கமாக கூறி இந்த படத்தை எடுத்துள்ளேன் இதில் எனக்கு வியாபார நோக்கம் இல்லை

32 வருடம் முயற்சி இரண்டரை வருட உழைப்பு இந்த படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் மதுரையில் பேட்டி
இரவின் மடியில் திரைப்பட குழுவினர் மதுரையில் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் பார்த்த ரசிகர்களையும் பொது மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்கள்
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள இரவின் மடியில் திரைப்படத்தை பார்த்த ஆண் பெண் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் திரைப்படம் குறித்து கலந்துரையாடினார்கள்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன்,
இந்த படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தார்
மேலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினி விஜய் அஜித் போன்றோர் படங்களை தான் காலை 4 மணிக்கு எல்லாம் ரசிகர்கள் தியேட்டரில் பார்ப்பார்கள் ஆனால் என்னுடைய இந்தப் படத்தையும் காலை நான்கு மணிக்கு எல்லாம் தியேட்டரில் ஆரவாரத்துடன் பார்த்த மக்களுக்கு நன்றி என தெரிவித்தவுடன் இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு சம்பந்தமில்லாத புது விதமான முயற்சி சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் என்பதை மக்களுக்கு போட்டு காண்பித்து சிங்கிள் சாட் பற்றி விளக்கமாக கூறி இந்த படத்தை எடுத்துள்ளேன்
இந்த படம் என்பது ரத்தமும் சதையும் கூடியதான உண்மையான ஒரு படம்
முதலில் உலகத்தரமான படமாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் உலகத்தலமான படம் என்பது எதார்த்தத்தை வெளியில் கொண்டு வருவது தான் என்பதை நான் காண்பித்து இருக்கிறேன்
நான் தாய்மை மற்றும் பெண்கள் புனிதமாக வாழ்க்கையைத் தொடங்குவது குறித்த விஷயங்களை கூறியுள்ளேன் அதில் எந்த கவர்ச்சியும் இல்லை முகம் சுளிக்கக்கூடிய எந்த விஷயமும் இல்லை நான் தமிழகம் முழுவதும் நிறையத் திரையரங்குகளுக்கு சென்று வருகிறேன் நிறைய பெண்களைப் பார்க்கிறேன் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு நிறைய பெண்கள் வந்திருப்பதை பார்க்கிறேன் அவர்களிடம் முகம் சுளிப்பது போல காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டால் யாரும் இல்லை என்று தான் சொல்கிறார்கள் இதையே எனது வெற்றியாக நினைக்கிறேன் இந்த படத்தை வைத்து நான் ஒரு பைசா கூட வியாபாரம் செய்யவில்லை ரசிகர்கள் வந்து பார்க்கும் டிக்கெட் பணம் தான் எனக்கு மிச்சம் என்னுடைய நேர்மையான உழைப்பிற்காக என்னுடைய பொருளாதாரம் சரிக்கினாலும் பரவாயில்லை என இந்த படத்தை எடுத்துள்ளேன் உங்களது வரவேற்பிற்கு நன்றி எனவும்
32 வருட முயற்சி இரண்டரை வருட உழைப்பு இந்த படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்தார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.