முகப்புஜோதிடம்ராசி பலன்( 31 அக்டோபர் 2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi...

( 31 அக்டோபர் 2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

சுபகிருது ஆண்டு – ஐப்பசி 14 – திங்கட்கிழமை (31.10.2022)
நட்சத்திரம் : உத்திராடம் 04:15 AM வரை பிறகு திருவோணம்
திதி : 01:11 AM வரை சப்தமி பின்னர் அஷ்டமி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 3.00 – 4.00

திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசி நேயர்களே, எதிலும் பொறுமையாக இருந்து சாதிக்கவும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். நண்பர்கள் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுனம்:

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சாதுர்யமாக பேசி காரியம் சாதிக்க முடியும். நண்பர்கள் அவசர நேரங்களில் உதவுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடகம்:

கடக ராசி நேயர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். மனதிற்கு ஒப்பாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்மம்:  

சிம்ம ராசி நேயர்களே, மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி:

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மறைமுக எதிரி தொல்லை நீங்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

துலாம்:  

துலாம் ராசி நேயர்களே, மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். பெற்றோர்கள் அறிவுரை கிடைக்கும். சிக்கலான காரியங்கள் கூட எளிதாக முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே, ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். முன்கோபத்தை குறைக்கவும். ஆன்மீக நாட்டம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே, குடும்பம் சீரான பாதையில் செல்லும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மகரம்:

மகர ராசி நேயர்களே, உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். தேவையான பொருட்களை வாங்க முடியும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய செய்தி ஒன்று வரும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!