முகப்புஜோதிடம்ராசி பலன்(24-11-2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today...

(24-11-2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

சுபகிருது ஆண்டு – கார்த்திகை 8 – வியாழக்கிழமை (24.11.2022)
நட்சத்திரம் : அனுஷம் 07:37 PM வரை பிறகு கேட்டை
திதி : 01:37 AM வரை பிரதமை பின்னர் துவிதியை
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை : 10.45 – 11.45

வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)
சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

🔯 மேஷம் -ராசி: 🐐
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் வேண்டும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம்.
மனதில் ஏற்பட்ட பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐அஸ்வினி : சேமிப்பு குறையும்.
⭐பரணி : புதுமையான நாள்.
⭐கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
════════════════

🔯 ரிஷபம் -ராசி: 🐂
நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமணம் தொடர்பான முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். வேலையாட்களை அனுசரித்து செல்வதால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐கிருத்திகை : ஆதரவான நாள்.
⭐ரோகிணி : பொறுப்புகள் கிடைக்கும்.
⭐மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
════════════════

🔯 மிதுனம் -ராசி: 👫
உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய தேடல் பிறக்கும். வரவு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
⭐திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.
⭐புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
════════════════

🔯 கடகம் -ராசி: 🦀
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். சுபகாரியம் சார்ந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எந்தவொரு செயல்பாடுகளிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். ஏற்ற, இறக்கமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
⭐பூசம் : கவனம் வேண்டும்.
⭐ஆயில்யம் : புரிதல் ஏற்படும்.
════════════════

🔯 சிம்மம் -ராசி: 🦁
உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டாரங்களில் நட்பு மேம்படும். பலவிதமான குழப்பங்களுக்கு நிலையான முடிவினை எடுப்பீர்கள். உறவினர்களால் வீண் விரயங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐மகம் : மாற்றமான நாள்.
⭐பூரம் : நட்பு மேம்படும்.
⭐உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
════════════════

🔯 கன்னி -ராசி: 🧛‍♀
வேலை நிமிர்த்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். இழுபறியான சில பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமையும், புரிதலும் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், அதை சார்ந்த முயற்சிகளும் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மையான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
⭐அஸ்தம் : புரிதல் ஏற்படும்.
⭐சித்திரை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
════════════════

🔯 துலாம் -ராசி: ⚖
இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சொத்துக்கள் சார்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

⭐சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
⭐சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
⭐விசாகம் : சாதகமான நாள்.
════════════════

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். தைரியம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்.

⭐விசாகம் : அமைதியான நாள்.
⭐அனுஷம் : கற்பனைகள் அதிகரிக்கும்.
⭐கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
════════════════

🔯 தனுசு -ராசி: 🏹
புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. திருப்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்‌.

⭐மூலம் : ஆர்வம் உண்டாகும்.
⭐பூராடம் : மாற்றமான நாள்.
⭐உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
════════════════

🔯 மகரம் -ராசி: 🐴
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலை நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வருத்தம் நீங்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐உத்திராடம் : மந்தத்தன்மை நீங்கும்.
⭐திருவோணம் : தீர்வு கிடைக்கும்.
⭐அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
════════════════

🔯 கும்பம் -ராசி. ⚱
வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மனை மற்றும் வாகனம் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் குறைகளை அன்பான முறையில் எடுத்து கூறுவதால் உங்களின் மீது நம்பிக்கை உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

⭐அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐சதயம் : முன்னேற்றமான நாள்.
⭐பூரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.
════════════════

🔯 மீனம் -ராசி: 🐠
வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். வேலையாட்கள் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
⭐உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
⭐ரேவதி : ஆதாயம் அடைவீர்கள்.
┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!