முகப்புUncategorizedதமிழகம்,காரைக்காலை சோ்ந்த 23 மீனவா்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, விமானத்தில் இன்று காலை சென்னை திரும்பினா்

தமிழகம்,காரைக்காலை சோ்ந்த 23 மீனவா்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, விமானத்தில் இன்று காலை சென்னை திரும்பினா்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழகம்,காரைக்காலை சோ்ந்த 23 மீனவா்கள்,இலங்கை சிறையிலிருந்து அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு,விமானத்தில் இன்று காலை சென்னை திரும்பினா்.விமானநிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,அரசு வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

தமிழ்நாட்டை சோ்ந்த மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இம்மாதம் 3 ஆம் தேதி அதிகாலையில், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினா், தமிழகம் மீனவர் களையும், அவர்களுடைய படகுகளையும் சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்தனா்.அதன்பின்பு இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆதியார் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதை அடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர் சங்கங்கள் தமிழக அரசுக்கு, கைதான மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தமிழக முதலமைச்சர், பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி மீனவா்களை விடுவிக்க,உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இம்மாதம் 8 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் மீனவா்களை விடுவித்தது. அதோடு இந்திய தூதரகத்திடம், மீனவா்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

மீனவா்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு,தனிமைப்படுத்தப்பட்டனா்.அதன் பின்பு 23 மீனவர்களுக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி கலங்கினர். அதன்பின்பு இன்று அதிகாலை, இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 23 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் இவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதோடு அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான வாகன வசதிகளும், தமிழக அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். அந்த வாகனங்களில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!