முகப்புஜோதிடம்ராசி பலன்(23-11-2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today...

(23-11-2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

சுபகிருது ஆண்டு – கார்த்திகை 7 – புதன்கிழமை – (23.11.2022)
நட்சத்திரம் : விசாகம் 09:37 PM வரை பிறகு அனுஷம்
திதி : 06:53 AM வரை சதுர்தசி பின்னர் 04:27 AM வரை அமாவாசை பின்னர் பிரதமை
யோகம்: சித்த யோகம்
நல்லநேரம்: காலை 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45

🔯 மேஷம் -ராசி: 🐐
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் வருகையால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். மாலை முதல் சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்குவதால் சேமிப்பு குறையும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

⭐அஸ்வினி : மகிழ்ச்சி ஏற்படும்.
⭐பரணி : அனுகூலமான நாள்.
⭐கிருத்திகை : சேமிப்பு குறையும்.
════════════════

🔯 ரிஷபம் -ராசி: 🐂
தனவரவு தேவைக்கு ஏற்ப கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியான சில பணிகள் எளிதில் முடியும். சிலருக்கு உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக செயல்படுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் குறையும். நட்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐கிருத்திகை : தனவரவு கிடைக்கும்.
⭐ரோகிணி : பயணங்கள் செல்வீர்கள்.
⭐மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.
════════════════

🔯 மிதுனம் -ராசி: 👫
உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்துவந்த குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐மிருகசீரிஷம் : மரியாதை அதிகரிக்கும்.
⭐திருவாதிரை : ஒத்துழைப்பு உண்டாகும்.
⭐புனர்பூசம் : உற்சாகமான நாள்.
════════════════

🔯 கடகம் -ராசி: 🦀
பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உறவினர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு.

⭐புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
⭐பூசம் : அனுசரித்து செல்லவும்.
⭐ஆயில்யம் : கவலை நீங்கும்.
════════════════

🔯 சிம்மம் -ராசி: 🦁
புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். சிக்கனத்துடன் செயல்பட்டால் செலவுகள் கட்டுபாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் கவனத்துடன் செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐மகம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐பூரம் : ஏற்ற, இறக்கமான நாள்.
⭐உத்திரம் : கவனத்துடன் செயல்படவும்.
════════════════

🔯 கன்னி -ராசி: 🧛‍♀
குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் உதவியால் கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

⭐உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
⭐அஸ்தம் : முயற்சிகள் கைகூடும்.
⭐சித்திரை : முன்னேற்றமான நாள்.
════════════════

🔯 துலாம் -ராசி: ⚖
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பொறுப்புகள் குறையும். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐சித்திரை : கலகலப்பான நாள்.
⭐சுவாதி : பொறுப்புகள் குறையும்.
⭐விசாகம் : தீர்வு கிடைக்கும்.
════════════════

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
புதுவிதமான சிந்தனைகளின் மூலம் கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். மனதில் ஏற்பட்ட பழைய சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. சிலருக்கு இழுபறியான தனவரவு கிடைக்கும். உயர்கல்வியில் மந்தமான சூழல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
⭐அனுஷம் : தனவரவு கிடைக்கும்.
⭐கேட்டை : மந்தமான நாள்.
════════════════

🔯 தனுசு -ராசி: 🏹
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். அலுவலக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐மூலம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
⭐பூராடம் : செலவுகள் ஏற்படும்.
⭐உத்திராடம் : மதிப்பு அதிகரிக்கும்.
════════════════

🔯 மகரம் -ராசி: 🐴
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேம்படும். எதிர்ப்பாராத தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். நிம்மதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
⭐திருவோணம் : தன்னம்பிக்கை மேம்படும்.
⭐அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
════════════════

🔯 கும்பம் -ராசி. ⚱
வியாபாரத்தில் எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். செலவுகளை குறைத்து கொள்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐அவிட்டம் : லாபம் கிடைக்கும்.
⭐சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.
════════════════

🔯 மீனம் -ராசி: 🐠
சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மாலை வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானமும் பொறுமையும் அவசியம். வியாபாரம் ரீதியான கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதால் சாதகமான சூழல் ஏற்படும். உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப்பூர்வமாக செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். திருப்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.

⭐பூரட்டாதி : அனுகூலமான நாள்.
⭐உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
⭐ரேவதி : மேன்மையான நாள்.
┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!