முகப்புஜோதிடம்ராசி பலன்(22-11-2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today...

(22-11-2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

சுபகிருது ஆண்டு – கார்த்திகை 6 – செவ்வாய்கிழமை (22.11.2022)
நட்சத்திரம்: ஸ்வாதி 11:12 PM வரை பிறகு விசாகம்
திதி : 08:49 AM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 10.45 – 11.45 / மாலை 4.45 – 5.45

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை
சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

🔯மேஷம் -ராசி: 🐐
சந்திரன் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதினால் உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
⭐️பரணி : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
⭐️கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

🔯 ரிஷபம் -ராசி: 🐂
சந்திரன் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். இறை வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

⭐️கிருத்திகை : மாற்றமான நாள்.
⭐️ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.

🔯 மிதுனம் -ராசி: 👫
சந்திரன் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பதினால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபார பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

⭐️மிருகசீரிஷம் : தனவரவு கிடைக்கும்.
⭐️திருவாதிரை : தடைகள் அகலும்.
⭐️புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.

🔯 கடகம் -ராசி: 🦀
சந்திரன் ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதினால் சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
⭐️பூசம் : மாற்றமான நாள்.
⭐️ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.

🔯 சிம்மம் -ராசி: 🦁
சந்திரன் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருப்பதினால் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். எதையும் சமாளிக்கக்கூடிய திறமை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மகம் : புதுமையான நாள்.
⭐️பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

🔯 கன்னி -ராசி: 🧛‍♀️
சந்திரன் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருப்பதினால் நண்பர்களின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனை விருத்திக்கான கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிதானமான பேச்சுக்களின் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

⭐️உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️அஸ்தம் : உதவி கிடைக்கும்.
⭐️சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

🔯 துலாம் -ராசி: ⚖
சந்திரன் ராசியில் இருப்பதினால் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடல் தோற்றப்பொலிவை பற்றிய எண்ணங்கள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்களுக்கு பின்பு சாதகமான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

⭐️சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
⭐️சுவாதி : முடிவு கிடைக்கும்.
⭐️விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
சந்திரன் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதினால் மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சோர்வின்றி செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️விசாகம் : எண்ணங்கள் உண்டாகும்.
⭐️அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️கேட்டை : புரிதல் ஏற்படும்.

🔯 தனுசு -ராசி: 🏹
சந்திரன் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருப்பதினால் சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். போட்டி தேர்வுகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மூத்த உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️மூலம் : இழுபறிகள் குறையும்.
⭐️பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️உத்திராடம் : அனுகூலமான நாள்.

🔯 மகரம் -ராசி: 🐴
சந்திரன் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருப்பதினால் அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் உறுதுணையாக இருக்கும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

⭐️உத்திராடம் : சாதகமான நாள்.
⭐️திருவோணம் : உதவி கிடைக்கும்.
⭐️அவிட்டம் : சிந்தனைகள் ஏற்படும்.

🔯 கும்பம் -ராசி. ⚱
சந்திரன் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதினால் மனதில் புதுவிதமான நம்பிக்கையும், லட்சியமும் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சோர்வு அகலும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அவிட்டம் : லட்சியம் உண்டாகும்.
⭐️சதயம் : ஆதரவான நாள்.
⭐️பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

🔯 மீனம் -ராசி: 🐠
சந்திராஷ்டமம் இருப்பதினால் பயனற்ற செலவும், நெருக்கடியும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அவ்வப்போது விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பார்த்த சில காரியங்கள் செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். அன்பு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️பூரட்டாதி : நெருக்கடியான நாள்.
⭐️உத்திரட்டாதி : சோர்வு உண்டாகும்.
⭐️ரேவதி : காலதாமதம் ஏற்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!