ஸ்ரீ சுபகிருது ஆண்டு – ஆடி 5 – வியாழக்கிழமை (21.07.2022) இன்றைய நாளுக்கான ராசி பலன் பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்ப பணிகளை கவனிக்க வேண்டிவரும். அசதி, சோர்வு, வந்து நீங்கும். கணவன் மனைவிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். புது நண்பர்களின் ஆதரவுக் பெருகும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். பிரியமானவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, புது முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தூர பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, பழைய சிக்கலை தீர்க்க புது வழி கிடைக்கும். அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். உஷ்ணம் தொடர்பான தொந்தரவு இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். சாலையை கடக்கும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே குடும்ப வாழ்க்கையில் சுவாரசியம் அதிகரிக்கும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.