முகப்புஜோதிடம்ராசி பலன்( 14-11-2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 |...

( 14-11-2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

ஐப்பசி: 28 திங்கள்-கிழமை 28- 11- 2022

🔎 ராசி- பலன்கள் 🔍

🔯 மேஷம் -ராசி: 🐐
சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். விவேகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.
⭐️பரணி : எண்ணங்கள் கைகூடும்.
⭐️கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
════════════════

🔯 ரிஷபம் -ராசி: 🐂
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் மேம்படும். எதையும் சமாளிக்கக்கூடிய மனோபலம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️கிருத்திகை : கவலைகள் குறையும்.
⭐️ரோகிணி : மேன்மையான நாள்.
⭐️மிருகசீரிஷம் : மனோபலம் உண்டாகும்.
════════════════

🔯 மிதுனம் -ராசி: 👫
தனவரவு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பேச்சுத்திறமையின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் மூலம் தனவரவிற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
════════════════

🔯 கடகம் -ராசி: 🦀
மனதில் சொந்த ஊர் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️பூசம் : அனுபவம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
════════════════

🔯 சிம்மம் -ராசி: 🦁
நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.

⭐️மகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️பூரம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️உத்திரம் : சாதகமான நாள்.
════════════════

🔯 கன்னி -ராசி: 🧛‍♀️
துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் எண்ணிய இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️உத்திரம் : தெளிவு பிறக்கும்.
⭐️அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
════════════════

🔯 துலாம் -ராசி: ⚖
சமூக பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். திட்டமிட்ட செயல்பாடுகளில் எண்ணிய முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். ஆசைகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.

⭐️சித்திரை : பொறுப்புகள் மேம்படும்.
⭐️சுவாதி : முடிவு கிடைக்கும்.
⭐️விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
════════════════

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். தடைகள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும்.
⭐️அனுஷம் : மாற்றம் உண்டாகும்.
⭐️கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.
════════════════

🔯 தனுசு -ராசி: 🏹
எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தடைபட்ட சில வரவு கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி தோன்றி மறையும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️பூராடம் : சோர்வு உண்டாகும்.
⭐️உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
════════════════

🔯 மகரம் -ராசி: 🐴
பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உறுதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திராடம் : திருப்திகரமான நாள்.
⭐️திருவோணம் : எதிர்ப்புகள் குறையும்.
⭐️அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.
════════════════

🔯 கும்பம் -ராசி. ⚱
மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். மற்றவர்களின் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். பணிகளில் உடல் உழைப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உழைப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

⭐️அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.
⭐️சதயம் : கவனம் வேண்டும்.
⭐️பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
════════════════

🔯 மீனம் -ராசி: 🐠
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். கலைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐️ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!