32 C
Cuddalore
புதன்கிழமை, செப்டம்பர் 22, 2021

புத்தாண்டு பற்றிய 10 தகவல்கள்

நாம் வருடம்தோறும் கடந்துசெல்லும், உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் நிகழ்வான புத்தாண்டு கொண்டாட்டத்தின் சில சுவாரசியமான உண்மைகள் மற்றும் விளக்கங்கள்.

முந்தய வருடத்தின் இன்ப துன்பத்தை மறந்து, பிறக்கும் புதிய வருடம் அனைவரும் நல்ல வருடமாக இருக்க வேண்டும் என உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் கொண்டாடும் ஒரு அற்புத நாள் இந்த புத்தாண்டு.

 1. புத்தாண்டு கொண்டாட்டம் என்பது பண்டைய எகிப்து காலத்திலிருந்து கடைபிடித்து வரும் ஒரு வழக்கம். நாம் தற்போது கொண்டாடுவது போல புத்தாண்டை ஜனவரி முதல் தேதியை மையமாக வைத்து வருடம் தோறும் கொண்டாடாமல், தங்கள் நாட்டில் உள்ள நைல் நதியில் வருடம் தோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை வைத்தே எகிப்தியர்கள் கொண்டாடி வந்துள்ளனர். நதியின் வெள்ளப்பெருக்கு பொதுவாக தற்போதைய ஜூலை மாதம் நிகழும் அந்த நிகழ்வை வெப்பேட் ரென்பெட் (Wepet Renpet) என அழைத்தனர்.
 2. கிமு 2000 இல், மெசொப்பொத்தேமியர்கள் (Mesopotamians) முதலில் புத்தாண்டை கொண்டாடினர். கிமு 46 இல், ஜூலியஸ் சீசர் ஜனவரி 1 ஆம் தேதியை புத்தாண்டுக்கான தேதியாக ஏற்றுக்கொண்டார். 1752 ஆம் ஆண்டில், இங்கிலாந்தும் அதன் அமெரிக்க காலனிகளும் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 1 ஆம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டன. ரோமானியர்கள் போன்ற மற்ற சில கலாச்சார மக்கள் ஆரம்பத்தில் ஒவ்வொரு மார்ச் 1 ஆம் தேதியும் புத்தாண்டை கொண்டாடினர்.
 3. புத்தாண்டு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கண் கவர் வாணவேடிக்கைதான், முற்காலங்களில் தீயை சக்திகள் மக்களிடையே தொற்றிக்கொல்லாம் இருக்க பட்டாசு வெடித்து, சத்தம் எழுப்பி தீய சக்திகளை அண்டவிடாமல் தடுத்தாக கூறப்படுகிறது. அதன் வழியிலே, பிறகும் புதிய ஆண்டில் மக்களிடையே தீய எண்ணங்கள் பரவாமல் இருக்க வாணவேடிக்கை வைத்து, ஒலி எழுப்பி கொண்டாடும் மரபை கடைபிடிக்கின்றனர்.
 4. 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஷாங் (shang) வம்சத்தின் ஆட்சியின் போது, வசந்த கால நடவு பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் சீனர்களால் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனபுராணங்களின் படி, நியான் என்னும் அசுரன் காலகட்டத்தில் மக்களை வேட்டையாடியதாக சொல்லப்படுகிறது.
 5. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் பல நாடுகளில் புத்தாண்டிற்கு முன்தினத்தை, டிசம்பர் 31ல் மறைந்த முதலாம் போப் சில்வெஸ்டர் நினைவாக சில்வெஸ்டர் தினம் (silvester day) என அழைப்பர்.
 6. கனடா மற்றும் சில அமெரிக்கர்கள் புத்தாண்டின் பொது மிகவும் குளிர்ந்த நீரில் குதித்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இந்த நிகழ்வுக்கு போலார் பியர் பிலஞ் (polar bear plunge) என பெயரிட்டுள்ளனர்.
  இந்த முறையில் தற்போது தொண்டு நிறுவனங்களுக்கு பணம் சேகரிக்கும் எண்ணத்தில் பலர் கலந்து கொள்கின்றனர்.
 7. அமெரிக்காவில் மக்கள் அதிர்ஷ்டத்திற்காக புத்தாண்டு தினத்தன்று கருப்பு கண்ணுடைய பட்டாணி, முட்டைக்கோஸ் மற்றும் ஹாம் (ham) சாப்பிடுகிகின்றனர். புத்தாண்டன்று டோனட்ஸ் (donut) போன்ற வட்ட வடிவ உணவுகள் சில அமெரிக்கா கலாச்சாரங்களில் நல்ல அதிர்ஷ்டமாக கருதி உண்ணப்படுகிறது.
 8. 1796 ஆம் ஆண்டில், ஸ்காட்டிஷ் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் ஆங்கில மொழி பேசுபவர்களுக்கான பாரம்பரிய புத்தாண்டு பாடலான “ஆல்ட் லாங் சைன்”(Auld Lang Syne) பாடலைக் கொண்ட ஸ்காட்ஸ் இசை அருங்காட்சியகத்தை வெளியிட்டார். அன்றிலிருந்து இன்று வரை அந்த பாடல் புத்தாண்டு கீதம் என ஆங்கிலம் பேசுபவர்களால் அழைக்கப்படுகிறது.
 9. ஜப்பானிய புத்த கோவில்களில், புத்தாண்டு கடவுளான தோஷிகாமியின்(Toshigami) வருகையை வரவேற்க 108 முறை மணிகள் அடிக்கப்படுகின்றன. சீனர்களைப் போலவே, அவர்கள் நீண்ட ஆயுளுக்கு நீண்ட நூடுல்ஸை சாப்பிடுகிறார்கள்.
 10. பின்லாந்தில், புதிய ஆண்டிற்கான மக்களின் அதிர்ஷ்டத்தை முன்பே அறிவிப்பதற்காக மாலிப்டோமென்சி(molybdomancy) எனும் பாரம்பரியம் நடைமுறையில் உள்ளது. ஒரு சிறிய அளவு திரவ ஈயத்தை உருக்கி குளிர்ந்த நீரில் ஊற்றி அது திடமாக மாறும்பொழுது அந்த நபரின் அதிர்ஷ்டம் கண்டறியப்படும்.
 11. புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் பந்து வீழ்ச்சியைக் காண சுமார் ஒரு மில்லியன் மக்கள் கூடுகின்றனர். டைம்ஸ் சதுக்கத்திலிருந்து விழும் பந்து 1000 பவுண்டுகள் எடை கொண்டது மற்றும் வாட்டர்ஃபோர்ட் கிரிஸ்டலில் (waterford crystal ) இருந்து தயாரிக்கப்படுகிறது. அதை ஒளிரச் செய்ய 9,000 க்கும் மேற்பட்ட LED விளக்குகள் உள்ளன. இந்த பந்து வீழ்ச்சி நிகழ்வை தொலைக்காட்சியில் மட்டும் சுமார் 1 பில்லியன் மக்கள் பார்க்கிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
2,951FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles