முகப்புஜோதிடம்ராசி பலன்(10.07.2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today...

(10.07.2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

சுபகிருது ஆண்டு – ஆனி 26 – ஞாயிற்றுக்கிழமை (10.07.2022) இன்றைய நாளுக்கான ராசி பலன் பார்ப்போம்.

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான  வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: கடினமாக வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.கல்யாணபேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள்ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாக அமையும்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அமோகமான நாள்.

கடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சகோதரர்கள் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் விட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்:  நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பணம் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்:  கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும்.  எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும்மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன்இருப்பதால் மனதில் இனம் புரியாதகவலை வந்து போகும்.  சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியநாள்.

தனுசு: எளிதில் முடித்து விடலாம் என்று நினைத்து காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்துசெல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். காணாமல் போனமுக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத்  துடிப்புடன்  செயல்படத்தொடங்குவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கிதுடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்தகூச்சல், குழப்பங்கள் நீங்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். நன்மை நடக்கும் நாள்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!